அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் திமுகவில் இணைந்தார்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் கடந்த 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், முக்கிய துறையான பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார்.

அதன்பின்னர் சில காரணங்களால் மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார் அந்தக் காலத்தில் 2001ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இளையான்குடி தொகுதியில் வெற்றியும் பெற்றார் இதன்பின்னர்  2009ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்.

சென்ற ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அக்கட்சிலிருந்து வெளியேறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவை தெரிவித்த ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரமும்  செய்தார். தி.மு.க-வில் இணைவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி இறுதிக்கட்ட முடிவை எடுத்தார் கண்ணப்பன்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று இணைப்பு விழாவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ராஜ கண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். 

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

aiadmk raja kannappan join to dmk


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->