#BREAKING || பாஜகவுடன் கூட்டணி இல்லை! அதிமுக அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
AIADMK left from NDA alliance
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் 3:45 மணி முதல் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என பெரும்பாலான அதிமுக மாவட்ட செயலாளர் தங்களின் நிலைப்பாடு தெரிவித்ததால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைமை திட்டமிட்டு வேண்டும் என்றே அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாலும், நிலம் மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநிலம் நாட்டை சேர்ந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பேசி வருவதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக விலகி கொள்வதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
English Summary
AIADMK left from NDA alliance