நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது.! - ஜெயக்குமார், அதிமுக.!
AIADMK Jayakumar warns BJP Annamalai
அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாஜகவின் டெல்லி தலைமை அதிமுகவுடன் இணக்கமாக இருந்தாலும் மாநில தலைமை அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் "அதிமுகவின் அடிமட்ட தொண்டனை கூட யாராவது விமர்சனம் செய்தால் அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்க தவறியது கிடையாது. அண்ணாமலைக்கே அதிமுகவை தொட்டான், கெட்டான் என தெரியும். இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவாக இருந்தாலும் சரி அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி அதிமுகவினரை விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். விமர்சனங்களை முன் வைத்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கும் சூழ்நிலை கண்டிப்பாக ஏற்படும். அந்த ஒரு நிலையை அண்ணாமலை கண்டிப்பாக ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது" என எச்சரிக்கும் வகையில் பதிலடி கொடுத்துள்ளார்.
English Summary
AIADMK Jayakumar warns BJP Annamalai