சிறுவனை வைத்து அதிமுக கூட்டத்திற்குள் காரை விட்டு விபத்து ஏற்பட்டு இருந்தால், யார் பொறுப்பு? அதிமுக கேள்வி!
AIADMK Condemn to DMk Mk Stalin Thiruchuzhi incident
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், திருச்சுழி தொகுதியில், ஏதோ சிறுவனை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது தெரியாமல் அஇஅதிமுக கூட்டம் பக்கம் வந்த திமுக காரை மறித்து அஇஅதிமுக-வினர் தாக்கியதாக திமுக-வினரும், சில ஊடகங்களும் பொய்யை செய்தி போல் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
1.மாற்றுப் பாதை இருப்பதை காவல்துறை தெரிவித்தும், வேண்டுமென்றே கூட்டத்திற்குள் நுழைந்தது அந்த திமுக கார்.
2.காரை ஒட்டியது யார் தெரியுமா? எந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொன்னார்களோ, அந்த சிறுவன் தான்!
இதை எப்படி எடுத்துக் கொள்வது? லைசன்ஸ் இல்லாத ஒரு சிறுவனை வைத்து கூட்டத்திற்குள் காரை விட்டு விபத்து ஏற்பட்டு இருந்தால், யார் பொறுப்பு?
இதையெல்லாம் அறிந்தே, மக்கள் பாதுகாப்பிற்காக தான் காரை மறித்தனர் அஇஅதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும்.
எந்த அளவிற்கு தில்லு முல்லு வேலைகளை செய்து எழுச்சிப் பயணத்தை முடக்கிட இந்த விடியா ஸ்டாலின் அரசு முயற்சிக்கிறது என்பதற்கு இதுவும் சாட்சி!
காரியாபட்டியில் திமுக காரிடம் இருந்து மக்களைக் காத்தது போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
AIADMK Condemn to DMk Mk Stalin Thiruchuzhi incident