2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமமுக! புதிய கொடி அறிமுகம்!
admmk new flag pasumponpandiyan DMK support
ஈரோட்டில் நடைபெற்ற அதிமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கழக பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன், அண்ணா மற்றும் பெரியார் படங்கள் இடம்பெற்ற புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
அவர் உரையில், இந்து முன்னணி மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்தியபோது, ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அதை பார்த்து மகிழ்ந்தது, பெரியார்-அண்ணா தொண்டர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.
உண்மையான பெரியார், அண்ணா கொள்கையை பின்பற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்கவே இந்த புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் விளக்கினார்.
கூட்டத்தில் 13 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, 2026 தேர்தலில் திராவிட கொள்கையை கடைபிடிக்கும் திமுகவுக்கு முழுமையான ஆதரவு அளித்து, தேர்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது.
English Summary
admmk new flag pasumponpandiyan DMK support