அதிமுக கூட்டத்தில் அடிதடி, கும்மாங்குத்து! செங்கோட்டையன் முன்னிலையில் நடந்த களேபரம்!
ADMK Senkottaiyan Meet Clash
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் இருதரப்பினரிடையே கைகலப்பு ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால், அதில் பங்கேற்கவில்லை என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
மேலும், அதிமுக சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையும் புறக்கணித்திருந்தது என அடுத்ததா சம்பவங்கள் அரங்கேறியது. இதனால் கட்சியில் ஏதெனும் பிளவு ஏற்பட்டு உள்ளதோ என்ற சர்ச்சையும் எழுந்தது.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் (ஈரோடு) 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். கூட்டத்தின் போது, அந்தியூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஒருவர் சொல்ல, அவரை அழைத்த செங்கோட்டையன் அவரின் குறைகளை கேட்டு அதற்க்கு பதிலளித்தார்.
பின்னர் அங்கிருந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள், புகார் அளித்த அந்த நிர்வாகியை தாக்கத் தொடங்கினர். சிலர் நாற்காலிகளை தூக்கி வீசி மோதிக் கொண்டனர்.
இந்த சம்பவம் அதிமுகவினர் தெரிவிக்கையில், புகார் அளித்த அந்த நபர் அதிமுக நிர்வாகியே இல்லை என்றும், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர் வந்து உள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
English Summary
ADMK Senkottaiyan Meet Clash