உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிச்சாமி மறைமுக விமர்சனம்! - Seithipunal
Seithipunal


தந்தையர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில், "இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, பிள்ளைகளை அன்போடு வளர்த்து, உழைப்பின் மூலம் வழிகாட்டி, தன் குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் கொள்கைத் தந்தைகளாக, இன்றளவும் நம்மை வழிநடத்தும் தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகிய ஒப்பற்ற தலைவர்களுக்கும் இந்நாளில் எனது புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினை சிலர் அப்பா என்று அழைப்பதும், அதனை அவர் பெருமையாக தருவதாகவும் கூறிவரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இந்த வாழ்த்து செய்தி அதனை மறைமுக விமர்சனம் செய்வதுபோல் உள்ளதாக பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK EPS Wish Dads day DMK MK stalin appa


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->