உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் எலான் மஸ்க்; 02-ஆம் இடத்தை இழந்துள்ள ஜெப் பெசோஸ்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் போர்ப்ஸ் நாளிதழ், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ.,வும், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 407.3 பில்லியன் டாலர்.

இந்த பட்டியலில் 02-ஆம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 04-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் 02-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக 26 பில்லியன் டாலர் சொத்து கிடைத்தது. இதனால், அவரது மொத்த சொத்து மதிப்பு 243 பில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது.

03-வது இடத்தில் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் 239 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார். அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ், இந்த முறை 04-வது இடத்துக்கு தள்ளப்பட்ட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 226 பில்லியல் டாலர் ஆக உள்ளது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 02-வது இடத்தில் இருந்து வந்த ஜெப் பெசோஸ், 2024-ஆம் ஆண்டு மட்டும் அக்டோபர் மாதம் மார்க் சக்கர்பெர்க்கிடம் 02-வது இடத்தை பறிகொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elon Musk returns to the top of the worlds billionaires list Jeff Bezos loses 2nd place


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->