அதிமுகவின் தலித் முதலமைச்சர்! எடப்பாடி VS டிடிவி! சசிகலா தம்பி, திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
ADMK EPS VS ttv dHINAKARAN dHANAPAL vck tHIRUMAVALAVAN
4 வருடத்திற்கு முன் அப்போதைய சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்குவதற்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதிமுக பட்டியலின எம்.எல்.ஏக்களே எதிர்ப்பு தெரிவித்ததாக, சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வர முடியாது, நாடு முழுவதும் இதே நிலைதான் உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பட்டியல் இன மக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்தால், நிச்சயமாக தமிழகத்தின் முதலமைச்சர் ஆக ஒரு தலித்தை நாங்கள் கொண்டு வருவோம் என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தலித்தை முதலமைச்சர் ஆக்குவோம் என்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.
இந்த நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க, திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ள விஷயம் தற்போது வெளிவந்துள்ளது.
இது குறித்து புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த பேட்டியில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு டிடிவி தினகரனால், எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சனை வந்த போது, அப்போதைய சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க நான் பரிந்துரை செய்தேன்.
ஆனால் தனபாலை முதலமைச்சராக தலித் எம்எல்ஏக்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அதே சமயத்தில் தனபாலை முதலமைச்சராக்கும் என் பரிந்துரைக்கு திருமாளவன் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்ததாக திவாகரன் தெரிவித்துள்ளார்.
திவாகரனின் இந்த பேட்டி குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், மக்களா எதிர்ப்பு தெரிவித்தார்கள்? அவர்கள் கட்சியில் (அதிமுக) தான் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எனவே இது குறித்து அவர்கள் கட்சியினர் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS VS ttv dHINAKARAN dHANAPAL vck tHIRUMAVALAVAN