அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்... நான் முன்மொழிகிறேன் - உதயநிதி ஸ்டாலின்!
ADMK Edappadi Palaniswami DMK Udhayanidhi Stalin
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காஞ்சிபுரத்தில் தனது பிரசாரத்தை ஆரம்பித்தார்.
இன்று அவர் செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது தெரிவிக்கையில், "இ.பி.எஸ். ஆம்புலன்சில் செல்கிறார் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. மனிதாபிமானம் கொண்ட ஒருவர் அப்படிப் பேச மாட்டார். நான் கூறியது, அ.தி.மு.க. கட்சி தான் தற்போது ஆம்புலன்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது.
அ.தி.மு.க. கட்சி ஐ.சி.யூ.வில் இருக்கும் போது, அதை காப்பாற்றும் மருத்துவராக முதலமைச்சர் வருவார் எனச் சொன்னேன். எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் வைத்தாலும், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வருவது இயல்பான விஷயமே.
ஆனால், இ.பி.எஸ். பா.ஜ.க.வின் அழுத்தத்திலிருந்து அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியவில்லை. உண்மையில், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக இ.பி.எஸ்.தான் தொடர்ந்து இருக்க வேண்டும். அது தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்யக்கூடிய ஒரே நன்மை. அப்போது எங்களுடைய வேலை இன்னும் எளிதாகிவிடும்.
அ.தி.மு.க.வினர் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது வேறு விஷயம். ஆனால் என் பரிந்துரை தெளிவாக இருக்கிறது – இ.பி.எஸ்.தான் நிரந்தர பொதுச் செயலாளர்."
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
ADMK Edappadi Palaniswami DMK Udhayanidhi Stalin