அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மகள்வழி பேத்தி விபத்தில் மரணம்!
ADMK dindigul srinivasan Grand Daughter Accident
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா (வயது 28), மதுரையில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
நேற்று மாலை, அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி காரில் பயணம் செய்தனர். காரை பார்த்திபன் என்றவர் ஓட்டினார். இந்த பயணத்தின் போது, கல்லாறு முதல் வளைவு அருகே காரின் பிரேக் வேலை செய்யாததால் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
விபத்தில் திவ்ய பிரியா மற்றும் பரமேஸ்வரி ஆகியோருக்கு தலையில் பெரிதும் காயம் ஏற்பட்டது. வளர்மதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
திவ்ய பிரியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். பரமேஸ்வரி மற்றும் மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
ADMK dindigul srinivasan Grand Daughter Accident