தமிழக காவலர்களின் கௌரவம் நடுத்தெருவில்...பதக்கத்தையே இரவல் வாங்கும் இரவல் மாடல் பொம்மை முதல்வர் - தமிழகத்தின் சாபக்கேடு - அதிமுக கண்டனம்!
ADMK Condemn to DMK Govt MK Stalin
அதிமுக விடுத்துள்ள கண்டன செய்தியில், "பதக்கத்தையே இரவல் வாங்கும் இரவல் மாடல் பொம்மை முதல்வர் - தமிழகத்தின் சாபக்கேடு!
இன்று தமிழக காவலர்களின் கௌரவம் நடுத்தெருவில் நிற்கிறது!
இந்த வருட குடியரசு தின விழாவில் பதக்கம் கொடுக்கக் கூடத் துப்பில்லாமல், போன வருடம் கொடுக்கப்பட்ட பதக்கங்களை இரவல் வாங்கி இந்த வருடம் கொடுக்கின்ற, இந்த அவலம் திமுக ஆட்சியை தவிர வேறு எங்காவது நடக்குமா?
வெட்டி விளம்பரம் செய்வதில் காட்டுகின்ற கவனத்தை, காவலர்களின் கௌரவமான பதக்கங்களை தயார் செய்வதில் இல்லையே ஏன்?
பதக்கம் இல்லாமல் இரவல் வாங்குவது போல் , நாளை சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய நேரத்தில் துப்பாக்கி இல்லாமல் இரவல் வாங்கவா முடியும்…?
ஆதலால் காவல்துறை விவகாரங்களில் இந்த கடைசி இரண்டு மாதம் ஆவது கவனத்துடன் கையாள வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Condemn to DMK Govt MK Stalin