'புதிதாக வந்தவர்களின் பப்பு இங்கு வேகாது'; தவெக விஜய்யை விமர்சித்துள்ள செல்லூர் ராஜு..!
Sellur Raju has criticized that Vijays political ambitions will not work here
மதுரை ஜீவா நகரில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:
புதிதாக வந்தவர்கள் புதிய ஆட்சியை கொடுத்து விடுவோம் என்று சொல்வார்கள். அவர்களது பப்பு எல்லாம் இங்கு வேகாது என்று தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார்.
அத்துடன், இளைஞர்களே நடிப்பை வைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களுக்கு கொள்கை இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஒழுங்காக இருக்கிறேன் என்றால், அது எம்ஜிஆர் கற்றுக்கொடுத்த பாடம். எந்த படத்திலும் குடிக்காமல் நல்வழிப்படுத்த வேண்டும். இதை எந்த நடிகராவது கற்றுக் கொடுத்திருக்கிறாரா? என்று விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரது பப்பு வேகாது பேசியுள்ளார்.
English Summary
Sellur Raju has criticized that Vijays political ambitions will not work here