'அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம்; நம்பர் 01 முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி'; உதயநிதி விமர்சனம்..!
Udhayanidhi has criticized Edappadi Palaniswami stating that the AIADMK governments hallmark was subservience
தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்று வரும் டெல்டா மண்டல திமுக மகளிரணி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது;
பெண்களுக்கு பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மைக் என்று நினைத்து கண்ணாடியை பார்த்து பிரதமர் மோடி பேசியுள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
மேலேயும், தேர்தல் எப்போதும் வந்தாலும் ஒன்றிய பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்றும், பாஜகவின் நம்பர் 01 முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். புதுப்புது அடிமைகள் வந்தாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று பேசியுள்ளார். அத்துடன், ஒன்றிய அரசின் அடையாளம் பாசிசம், முந்தைய அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம் எனவும் உதயநிதி அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Udhayanidhi has criticized Edappadi Palaniswami stating that the AIADMK governments hallmark was subservience