அமெரிக்காவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழைய முயற்சி; எல்லைப் பாதுகாப்பு அமைப்பு..! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு இந்தியர் என, அமெரிக்காவின் உள்ளே சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசின் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புள்ளிவிபர தகவலின் படி, கடந்த 2024-இல் 85,119 இந்தியர்கள் பிடிபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-இல் இந்த எண்ணிக்கை 23,830 ஆக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைவோரில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் போது பிடிபட்டதாக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஜனவரி மற்றும் டிசம்பர் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 23,830 இந்தியர்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், இது 2024-இல் இருந்த 85,119-ஐ விட மிகவும் குறைவு என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் முதல் இடத்திலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லையில், அதிகரித்த கண்காணிப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழான கொள்கை மாற்றங்கள் மற்றும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின் தீவிரமான அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என அமெரிக்க எல்லை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், எல்லை ரோந்துப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், கடத்தல் பாதைகள் குறுகிவிட்டன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிடிபடுபவர்களுக்கும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், எல்லை தாண்டுதல்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இவ்வாறு பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை மற்றும் சிறந்த ஊதியத்தைத் தேடிச் சென்ற தனிநபர்கள் என்று கூறப்படுகிறது.

அத்தோடு, எல்லைகளுக்கு அருகே ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்படுவது, கவலையளிக்கும் போக்கை அமெரிக்க முகமைகள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு, கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது குஜராத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த  'டிங்குச்சா' சம்பவத்திற்குப் பிறகு, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இத்தகைய பயணங்களின் போது குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படுவது தொடர்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A shocking report reveals that an Indian attempts to enter the United States illegally every 20 minutes


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->