நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து திலக் வர்மா விலகல்; டி20 உலகக் கோப்பைக்கான ஆடும் லெவனில் கேள்விக்குறியாகும் சஞ்சு சாம்சன் இடம்..? - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலிருந்து திலக் வர்மா விலகியுள்ளார். கடந்த ஜனவரி 07-ஆம் தேதி அவருக்கு அடிவயிறு தொடர்பான சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இருப்பினும், அவர் முழுமையான உடல் தகுதியை எட்ட இன்னும் கூடுதல் காலம் தேவைப்படுகிறது. 

இதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ நிர்வாகமும் பயிற்சியாளரும் அவருக்கு இந்த ஓய்வை வழங்கியுள்ளனர்.

வரும் பிப்ரவரி 03-ஆம் தேதி திலக் வர்மா மும்பையில் தேசிய அணியுடன் இணைவார் என்றும், பிப்ரவரி 07-ஆம் தேதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் திலக் வர்மாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ வெளியிட்ட முந்தைய அறிவிப்பில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மா இல்லாத நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து நீடிப்பார் என்று தேர்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளிக்கு பிண அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் 03-வது வரிசையில் களமிறக்கப்பட்டு தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வருகிறார். 

ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்கள், மற்றும் 'டக் அவுட்' என ஆட்டமிழந்ததுள்ளார். இது அணி நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் இதேபோல் சொதப்பினால், உலகக் கோப்பைக்கான ஆடும் லெவனில் அவரது இடம் கேள்விக்குறியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும், திலக் வர்மா அணிக்குத் திரும்பும்போது இஷான் கிஷனின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை சஞ்சு சாம்சனுக்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tilak Varma withdraws from the series against New Zealand


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->