முதல்வர் வெட்கித் தலை குனிய வேண்டும்.. வெட்கம் இருந்தால் தானே? அதிமுக கடும் விமர்சனம் செய்தி வீடியோ வெளியீடு!
ADMK Condemn Madurai CM MK Stalin road show
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சோதனைகளை திரை போட்டு மறைத்து, சாதனை போல ஏமாற்றி விளம்பரம் செய்வதற்கு இந்த முதல்வர் வெட்கித் தலை குனிய வேண்டும்.
வெட்கம் இருந்தால் தானே?
மக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை. மாறாக, பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
2026 ல் இவை அனைத்திற்கும் தங்கள் வாக்கால் பதில் சொல்வார்கள்.
மதுரையில் பொம்மை முதல்வர் முக ஸ்டாலின் ரோட் ஷோ என்ற பெயரில் பவனி வருகிறாராம்.
அதற்காக 2 கி.மீ-க்கு தூர்வாரப்படாத கால்வாயை ஜமுக்காளம் போட்டு மறைத்துள்ளது திமுக அரசு!
உங்கள் ஆட்சியின் அவலங்களைப் பார்க்க உங்களுக்கே மனமில்லையா முக ஸ்டாலின்?
இதனை தினமும் கண்டு, உங்கள் ஆட்சியின் லட்சணத்தை அறிந்த மதுரை மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
"பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது" என்று நீங்கள் உளறித் தள்ளிய பழமொழியை உங்களுக்கே நினைவு படுத்துகிறோம்.
மன்னராட்சி என்ற நினைப்பில் இருக்கும் ஸ்டாலின் ஆட்சி 2026ல் வீழ்ந்தே தீரும் என்பதற்கு இதுவும் சாட்சி" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK Condemn Madurai CM MK Stalin road show