சென்னையில் களமிறங்கும் எடப்பாடி பழனிச்சாமி.! வெளியானது அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பின்படி, நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒத்தார்கள் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சென்னையில் மட்டும் 27-ந் தேதி (புதன்கிழமை) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், சென்னையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக தமிழகம் மற்றும் சென்னை முழுவதிலும் இருந்து அதிமுக-வினரை திரட்ட ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk chennai protest head eps


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->