அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது - காங்கிரஸ் எம்பி பகீர் குற்றச்சாட்டு!
ADMK BJP Alliance break Congress mp
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற பாஜகவின் நீண்டநாள் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்களால் நேசிக்கப்பட்ட வலுவான தலைவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி இன்று மீண்டும் பிளவின் விளிம்பில் நிற்கிறது.
இந்திய அரசியலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த பல பிராந்திய கட்சிகளின் நிலை என்ன ஆனது என்பதை நாடு பார்த்திருக்கிறது.
சிவசேனை உடைந்தது. ஜேட்யூ பலவீனமடைந்தது. அடுத்த இலக்கு அதிமுகவா என்ற கேள்வி இன்று எழுகிறது.
நண்பர்களை முதலில் அழித்துவிட்டு, பின்னர் அவர்களின் இடத்தை கைப்பற்றுவது தான் பாஜகவின் அரசியல் முறை.
“Parasite politics” மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK BJP Alliance break Congress mp