காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட்! காங்கிரஸுக்கு பல்ப் கொடுத்த அறிவாலயம்! ஒரே வார்த்தையில் டீலை முடித்த தலைகள்!
A Rajya Sabha seat for Congress The knowledge center that gave the Congress a bulb The heads that sealed the deal with one word
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக–காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன், இரண்டு ராஜ்யசபா இடங்களையும் காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, ஏற்கனவே சிறிய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்புடனான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கு மேல் இந்த முறை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்ததாக தகவல். ஆனால், “கடந்த முறை போலவே 25 தொகுதிகள் மட்டுமே சாத்தியம். சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம்” என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை வலுப்படுத்த கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன என்பதால், திமுகவிடம் இரண்டு ராஜ்யசபா சீட்டுகளை காங்கிரஸ் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், திமுக தரப்பு இதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, வட மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தமிழகத்திலிருந்து ராஜ்யசபா இடம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தை திமுக வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. “ஒரு ராஜ்யசபா இடம் மட்டுமே வழங்க முடியும்; அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற நிபந்தனையையும் திமுக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த சீனியர் காங்கிரஸ் தலைவர் ஒருவருக்கு அந்த இடம் வழங்கப்பட்டால் திமுக தரப்பில் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் மேலிடத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து திமுக அல்லது காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதி பங்கீடு குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
A Rajya Sabha seat for Congress The knowledge center that gave the Congress a bulb The heads that sealed the deal with one word