விஜய்க்கு 80 தொகுதி? துணை முதல்வர் பதவி? பெரும்பான்மை கிடைக்காது.. அதிமுக அப்செட்? தவிடுபொடியாகும் பாஜகவின் பிளான்?
80 seats for Vijay Deputy Chief Minister post Wonot get majority AIADMK upset BJP plan to be crushed
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பான பேச்சுகள் எழுந்துள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் (NDA) கொண்டு வர பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தகவல்களின்படி, என்.டி.ஏ கூட்டணியில் இணைய வேண்டுமெனில் 80 சட்டசபைத் தொகுதிகளும், துணை முதல்வர் பதவியும் வழங்க வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கையை ஏற்றால் அதிமுகவுக்கு 100 முதல் 110 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும் என்பதால், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது கடினமாகிவிடும் என அதிமுக வட்டாரங்கள் கவலைப்படுகின்றன. இதனால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்பதாலேயே அதிமுக தரப்பில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
மறுபுறம், திமுக கூட்டணியை எதிர்கொள்ள வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக, விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய்க்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தயக்கம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதன் வெளிப்பாடாக சமீப காலமாக அதிமுக தலைவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. “அதிமுக தலைமையை ஏற்று கூட்டணியில் சேர தயாராக இருந்தால் யாராக இருந்தாலும் வரலாம்” என்று அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் பல யூகங்கள் பரவி வந்தாலும், அதிமுக மற்றும் தவெக இரு தரப்பும் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று பொதுவெளியில் மறுத்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தவெக நிர்வாகிகளும் இதனை தெளிவாக மறுத்துள்ளனர்.
இதற்கிடையில் பாஜக தலைவர்கள் தற்போது ரஜினிகாந்த் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து தவெக மற்றும் அதன் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்து வருவது, விஜய் என்.டி.ஏ கூட்டணியில் இணைய வாய்ப்பு குறைந்திருக்கலாம் என்ற அரசியல் மதிப்பீடுகளையும் உருவாக்கியுள்ளது.
English Summary
80 seats for Vijay Deputy Chief Minister post Wonot get majority AIADMK upset BJP plan to be crushed