அதிமுகவுக்கு அடுத்த பின்னடைவு: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் திடீர் ராஜினாமா: சூடுப்படிக்கும் அரசியல் களம்..!
300 Sengottaiyan supporters suddenly resign from AIADMK party
அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலை புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோபி சட்டமன்ற தொகுதியில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் தங்கள் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ள சம்பவம் அதிமுக தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்திருந்தார்.
இதற்கு பதிலடியாக செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.அத்துடன், செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரின் கட்சி பதவியும் பறிக்கப்பட்டது. இந்நிலையிலேயே கோபி சட்டமன்ற தொகுதியில் பதவி வகித்து வரும் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர் கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 300 பேர் பதவி விலகியுள்ளனர்.

இது குறித்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியையும் ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு மக்களுக்கு பயனுள்ள ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும்.
கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதற்கு தாங்கள் ( பொதுச்செயலாளர் )அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவிகளில் பதவியில் நீடிப்போம் என்று அவர்கள் ஒரு படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியுள்ளனர்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
300 Sengottaiyan supporters suddenly resign from AIADMK party