மேட்டுப்பாளையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அதிரடி கைது.!!
2 AIADMK MLAs arrested in mettupalayam
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் குப்பை அள்ளுவது, தார் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டில் வந்த நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. முக்கியமான கூட்டத்தில் நகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் இந்த விவகாரங்கள் குறித்து அதிமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பியதற்கு திமுக கவுன்சிலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுகவைச் சேர்ந்த 14 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பவர் அதிமுக கவுன்சிலர் மீது நாற்காலிகளை தூக்கி எறிந்துள்ளார்.
இதனை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு தங்களது ஆதரவாளர்கள் உடன் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தி போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை எனக்கு நிகழ்ச்சி அதிமுக எம்எல்ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் 2 அதிமுக எம்எல்ஏக்கள், 8 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
English Summary
2 AIADMK MLAs arrested in mettupalayam