கால்பந்து மையம் மாறி துயரில் முடிந்த 17 வயது மாணவி: முதல்வர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
17 year old student dies after football training session Chief Minister announces 3 lakh relief family
சேலத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,"சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டையைச் சேர்ந்த திவ்யதர்ஷினி (17) என்ற மாணவி, கடந்த 23.1.2026 அன்று பிற்பகல் தனது சக மாணவியருடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து, மிகுந்த வருத்தமும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவி திவ்யதர்ஷினியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
17 year old student dies after football training session Chief Minister announces 3 lakh relief family