வீட்டிலேயே சுவையான பேரிச்சம் பழ கேக்.! இதோ கேக் ரெஸிபி!. - Seithipunal
Seithipunal


கேக் என்றாலே நமக்கு பேக்கரியில் இருக்கும் அழகிய கேக்குகள் தான் ஞாபகம் வரும். ஆனால் நம் வீட்டிலேயே செய்யக்கூடிய அருமையான பேரிச்சம் பழம் கேக் ஒன்றினை பார்க்கலாம்:.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை - 1 கப்
முட்டை - 2
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
பேரீச்சம்பழம் - 250 கிராம்
வெண்ணெய் - 125 கிராம்
வெண்ணிலா எசன்ஸீ- 1 தேக்கரண்டி

கார்னிஷ் செய்ய தேவையான பொருட்கள் :

வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 60 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 1 கப்
ஹெவி கிரீம் - 300 மில்லி கிராம்

செய்முறை:

ஓவனை முன்னரே ஆன் செய்து பேக்கிங் டின்னை தயார் செய்து கொள்ளவும். ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி செல்சியஸ்க்கு அதிகப்படுத்தி ஏழு சென்டிமீட்டர்  ஆழம் மற்றும் 22 சென்டிமீட்டர் பேஸ் கொண்ட பேக்கிங் டின்னை கிரீஸ் செய்து வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்கள் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து  கொதிக்கும் தண்ணீர் ஊற்றி  ஊற வைக்க வேண்டும்.

கரண்ட் எலக்ட்ரிக் மிக்ஸரை வைத்து  வெண்ணை, சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை நன்றாக பீட் செய்து கொள்ளவும். முட்டைகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து பீட் செய்து கொள்ள வேண்டும்.

பீட் செய்து வைத்த இந்த கலவையை  பேரித்தம் பழம் ஊற வைத்த கலவையுடன் நன்றாக சேர்த்து மைதா மாவும் சேர்த்து  பெரிய மெட்டல் ஸ்பூன் பயன்படுத்தி பேரிச்சம்பழம் மைதா மாவுடன் இந்தக் கலவை நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கலக்கவும்.

முன்பே நாம் ஓவனில் தயார் செய்து வைத்திருந்த பேக்கிங் டின்னில் இந்தக் கலவையை கரண்டியால் ஊற்றி  30 முதல் 40 நிமிடங்களுக்கு பேக் செய்து  எடுத்தாள்  நமது கேக் தயாராகிவிடும் .

நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய்,  ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கலக்கவும் அடுப்பை மிதமான அளவில் வைத்து கொதி வரும் வரை கலக்கிக் கொண்டே இருக்கவும்.
 
தீயை குறைத்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது கேரமல் ரெடி ஆகிவிடும்.

நாம் தயாரித்த கேரமல் சாஸை பேக்கிங் செய்த கேக்கின் மீது கொட்டி ஒரு பத்து நிமிடம் ஊற விட்டு எடுத்தால்  நமது சுவையான கேக் தயாராகிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yummy dates cake receipe jus try this


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->