நொறுக்குத்தீனி பிரியர்களுக்கு எச்சரிக்கை..! அளவுக்கு மீறினால் அவ்வளவுதான்..! - Seithipunal
Seithipunal


நொறுக்குத்தீனி பிரியர்களாக நீங்க இருக்கீங்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான். இந்த நொறுக்குத்தீனி தனது சுவையானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.

இந்த நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால், நாளடைவில் அது உங்களில் உடல் ஆரோக்கியத்தையே உருக்குலைத்துவிடும் மறந்து விடாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடாமல் தவிர்ப்பது குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அதாவது, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறி அதை பழக்கப்படுத்துவது பெரியவர்களாகிய பெற்றோரின் முக்கிய பொறுப்பு.அனால், நீங்களே நொறுக்குத்தீனி சாப்பிட ஆசைப்பட்டால் என்ன செய்வது..?

குறிப்பாக இந்த நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. நொறுக்குதீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டு வரும் குழந்தைகள் எப்போதும் சோர்வாகவும், துடிப்புடன் இல்லாமல், தெம்பின்றியும் காணப்படுவார்கள்.

இதன் காரணமாகவே பெரும்பாலான குழந்தைகள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகின்றனர். நொறுக்குத் தீனியில் உள்ள அதிக கொழுப்பால் உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுத்த கூடும்.

பொதுவாகவே இந்த நொறுக்குத்தீனிகள் குழந்தைகள் அதிகமாக விரும்புவதற்கு காரணம், அதன் கவர்ச்சி தன்மை. அதாவது, ஒரு அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக்கும் வகையில் பேக்கிங் செய்யப்பட்டு வருவதும். விளம்பரங்களில் வரும் அந்த அழகிய கவர்ச்சியான வார்த்தைகள். தொகுப்புகள் கூட முக்கிய காரணம்.

இதனை தடுக்க முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும், பெற்றோர்களே குழந்தைகளுக்கு இயற்கையான முறையில், ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம். அதனை நீங்கள் எப்படி வண்ணமயமாகவும் புதுமைத் தோற்றத்துடனும் கொடுக்கின்றீகள் என்பது பொறுத்து அமையும்.

உதாரணமாக காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான முறையில் சாலட் தயாரித்து கொடுக்கலாம். மேலும், குழந்தைகளுக்கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது ரொம்ப அவசிய மான ஒன்று.

அடுத்ததாக, எமனை பாக்கெட்டில் வைத்து கண்டு திரிவது போல ஒன்றுதான், நீங்கள் குழந்தைகளுக்கு வாங்கு கொடுக்கும் மற்றும் நீங்கள் வாங்கி சாப்பிடும்  ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகள். 


வீட்டில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு அவர்கள் அதை மீண்டும் வாங்கி சாப்பிடாதவாறு பார்த்துக் கொள்வது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அவற்றின் தீமைகளைப் பற்றி தெளிவாக விளக்கிக் கூற வேண்டும்.அதனால் ஏற்படும் தீமைகளை பட்டியலிட்டு காட்டவேண்டும். 

பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் ஆசைக்காக ஓரிரு தடவை சாப்பிட வேண்டிய நொறுக்குத்தீனியை நம்மில் பலர் மெயின் டிஸ் ஆகவே உட்கொள்கின்றனர். அதிலும், தொலைக்காட்சி, சினிமா பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத் தீனிகளை வாங்கி  சாப்பிடுகிறோம். இவ்வாறு அதனை சாப்பிடுவதால் வினையை விலை கொடுத்து வாங்குவது போலாகும். தொடர்ச்சியான நொறுக்குத் தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை மறக்க வேண்டாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Warning to snack lovers


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->