கேரட் பாசுந்தி...இப்படி செஞ்சு பாருங்க...! சுவை அப்படி இருக்கும்...!
try this carrot basundhi recipe once
கேரட் பாசுந்தி....
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால் ஒரு லிட்டர்
சர்க்கரை 3 கப்
கேரட் 3
பாதாம் 10
முந்திரி 10
-tp8xd.jpeg)
செய்முறை :
முதலில் கேரட்டைத் துருவி வைத்துக் கொள்ளவும். பின் பாதாம் மற்றும் முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்து கேரட் துருவலுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை சுண்ட விடவும். ஓரங்களில் படியும் ஏடுகளையும் சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் பாலுடன் சர்க்கரை மற்றும் கேரட் விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் நவராத்திரி ஸ்பெஷல் கேரட் பாசந்தி தயார்.
English Summary
try this carrot basundhi recipe once