கொஞ்சம் காமெடி.. கொஞ்சம் கவிதை..! சிரிக்கலாம் வாங்க..!
seithipunal jokes part 2
மோகன் : கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பவர்களுக்கே அறிவு அதிகம்-னு ஒரு ஆய்வு சொல்லுது...
குமார் : ஆமா.. யாரு அந்த ஆய்வை நடத்துனாங்க...
மோகன் : என்கூட கடைசி பெஞ்சுல உக்காந்து இருந்தவனுங்கதான்...😆
குமார் : 😳😳
அப்பா : ஏன்டா மார்க் இவ்ளோ கம்மியா வாங்கியிருக்க?... உன்ன என் புள்ளைன்னு சொல்லவே வெக்கமா இருக்கு...
மகன் : உன்ன யாருப்பா புள்ளைன்னு சொல்ல சொன்னது... மச்சின்னு சொல்லு...
அப்பா : 😡😡
அப்பா : ஏன்டா டிரம்ம உருட்டுற?
மகன் : தம்பிக்கு விளையாட்டு காட்டுறேன்பா...
அப்பா : தம்பி எங்கடா?
மகன் : டிரம்முக்குள்ள இருக்கான்பா...
அப்பா : 😳😳
நோயாளி : நீங்க எழுதி கொடுத்த மாத்திரை எங்கேயுமே இல்லையாமா டாக்டர்...
டாக்டர் : வாடா வா... பேனா எழுதுதான்னு கிறுக்கி பாத்த பேப்பரை தூக்கிட்டு போனது நீ தானா?
நோயாளி : 😂😂
கொஞ்சம் காமெடி.. கொஞ்சம் கவிதை..!
அன்பே நீ தோசை...
எனக்கு உன் மேல ஆசை...
அன்பே நீ இட்லி...
உன் அண்ணன்தான் ஜெட்லி...
அன்பே நீ கெட்டி சட்னி...
என்னை போடாதே பட்னி...
அழகே நீ ஒரு ஊத்தாப்பம்...
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்...
அன்பே நீ பரோட்டா...
பொண்ணு கேட்டு வரட்டா?
அன்பே நீ ஆப்பம்...
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்...
அன்பே நீ பூரி...
இத படிச்சுட்டு துப்பாத காரி...
அன்பே நீ கையேந்தி பவன்...
உனக்காக கையேந்துறான் இவன்...
சிங்கிள் கவிதை:
ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை... ஆனால்,
எனக்கொரு மும்தாஜ் கிடைக்கவில்லை...
என்ன செய்ய... என் விதி அப்படி...😟😟
காதல் கவிதை:
ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை... ஆனால்,
என் மும்தாஜ் என்னை மணம் செய்துகொள்ள மறுக்கிறாள்...
என்ன செய்ய... என் விதி அப்படி...😩😩
கணவனாக:
ஒரு தாஜ்மஹாலை கட்டிட ஆசை... ஆனால்,
என் மும்தாஜ் இன்னும் சாகவில்லையே...
என்ன செய்ய... என் விதி அப்படி...😭😭