ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா.?
Benefits of mutton leg soup
என்னதான் நாம் பழங்கள், காய்கறிகள் என இயற்கை உணவுகளாக சாப்பிட்டாலும் சில அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் தான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. அந்த வகையில் இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பூண்டு உள்ளிட்ட இயற்கையான பொருட்களுடன் ஆட்டுக்கால் சூப் செய்து குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எந்த பதிவில் நாம் காணலாம்.
ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலில் சக்தி அதிகரித்து எலும்பு வலுவடைகிறது. மேலும் மிளகு சேர்த்து ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் இருமல், நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகள் குணமாகும்.
குளிர்காலங்களில் ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் சளி உள்ளிட்ட பிரச்சினைகளை நீக்கி, குளிரையும் போக்க உதவுகிறது.
மேலும், உடலில் ஏற்படக்கூடிய எரிச்சல் மற்றும் செரிமான கோளாறுகளை ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் குணமாகிறது.

குறிப்பாக அதிக புரதம் கொண்ட ஆட்டுக்கால் சூப் எடை குறைக்க உதவுகிறது. ஆனால், ஏற்கனவே உடல் எடை குறைவாக உள்ளவர்கள் ஆட்டுக்கால் குடிக்காமல் இருப்பது நல்லது.
ஆட்டுக்கால் சூப்பில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு போன்ற மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புகள் வெளியேற உதவுகின்றன. மேலும் ஆட்டுக்கால் சூப்பில் உள்ள அர்ஜினைன் மற்றும் குளுட்டமைன் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கிறது.
ஆட்டுக்கால் சூப்பில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும், ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. குடலை குணப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்துகிறது.
English Summary
Benefits of mutton leg soup