தினமும் இந்த 4 பழங்களை சாப்பிட்டால் போதும்.. எந்த நோயும் அண்டாது.! - Seithipunal
Seithipunal


மருத்துவர்கள் தினமும் இயற்கையான முறையில் விலையக்கூடிய விதைகள் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ண அறிவுறுத்துகின்றனர். அதன்படி தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய 4 பழங்கள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் உள்ள ஃப்ளேவினாய்டு பாலிமர் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது குளுக்கோஸை கொழுப்பாக மாற்றும் என்சைமின் செயலை தடுப்பதால் குளுக்கோஸ் சக்தியாக எரிக்கப்படுகிறது.

ப்ளூ பெர்ரி

ப்ளூ பெர்ரியில் உள்ள ஆர்த்தோ சயனைன் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். தினமும் அரை கப் அளவு ப்ளூ பெர்ரி சாப்பிட்டால் 100 மில்லி கிராம் அளவுள்ள ஆந்தோசயனின் கிடைக்கும்.

ஸ்ட்ரா பெர்ரி

அதிக கார்போஹைட்ரேட் உணவு சாப்பிட்டிருந்தால் அதனால் அதிகரிக்கும் சர்க்கரை அளவை ஸ்ட்ராபெரி குறைக்கும். மேலும் இது இதய நோய் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும்.

பேரிக்காய்

பேரிக்காயில் உள்ள பெக்டின் மற்றும் ஃப்ளேவினாய்டு சர்க்கரை வியாதியை தடுக்கிறது. உடல் எடையை குறைக்க செய்கிறது. தினமும் வேரிக்கையை சாப்பிடுவதால் ஜீரண மண்டலம் ஆரோக்கியமாகவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

மேலும் இந்த நான்கு பழங்களை சாப்பிடுவதால் மூலம் உடல் எடை குறையும். குறிப்பாக இதய நோய் ஏற்படாமல் தடுக்கும். இரைப்பை வளமுடன் இருக்கும். புற்றுநோய் வராது. நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்காகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 fruits important for daily eat


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->