பிறப்புறுப்பின் வகைகள் என்ன?.. அந்த இடத்தில் துர்நாற்றம் ஏன்?.! பிரச்சனைகள் என்ன?.. தவிர்க்க ஆலோசனைகள்.!!
Types of Vagina and Problems and Solution of Vaginal Issue Such as Itching and Bad Smell
பெண்களின் பிறப்புறுப்பை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் அதனை குறைவாக மதிப்பிடுவதும் இருந்து வருகிறது. பெண்களின் அழகிற்கும் - அமைதிக்கும் - வலிமைக்கும் வழிவகுப்பது பெண்களின் பிறப்புறுப்பு ஆகும். பெண்களின் மிகப்பெரிய பலத்திற்கு வழிவகுக்கும். பெண்களின் பிறப்புறுப்பு என்பது நமது கைகளில் இருக்கும் கை ரேகைகளை போலத்தான். உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கைரேகையில் இருக்கும் மாற்றத்தை போன்று பிறப்புறுப்பும் வெவ்வேறாக இருக்கும். அந்தந்த வயது மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை என பல விதமான காரணத்தையும், காரணிகளையும் பொறுத்து மாறுபடும். பெண்களின் பிறப்புறுப்பில் அவ்வப்போது லேசான துர்நாற்றம் வருவதும் இயல்பான ஒன்றுதான்.

இந்த துர்நாற்றமானது சில சமயத்தில் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பிறப்புறுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் நோயின் தாக்கம் மற்றும் தொற்றுகள் அதிகரிப்பதன் விளைவாகவே இந்த துர்நாற்றம் ஏற்படுகிறது. ஆரோக்கிய நிலையில் இருக்கும் பெண்ணில் இருந்து வெளியேறும் திரவத்தின் pH அளவானது 4.5 ஆகும். பாக்டீரியாவின் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதன் விளைவாகவே, பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தின் மூலமாக துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த துர்நாற்றமானது அழுகிய மீன் போன்று உணரக்கூடிய பட்சத்தில் இருந்தால் Vaginosis நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த சமயத்தில் அரிப்புடன் துர்நாற்றமும் ஏற்பட்டால் ஈஸ்ட் நோய் தொற்றாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இதனைப்போன்று சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்று இருந்தால் அமோனியா வாசனையை போன்றவாறு இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சனை சரியாகவில்லை என்றால் மருத்துவரை நாடுவது நல்லது. இதனைத்தவிர்த்து மாதவிடாயின் போது பொதுவாக ஏற்படும் துர்நாற்றமானது இயல்பாக சிறிதளவு இருக்கும். இந்த துர்நாற்றம் மாதவிடாயின் போது அதிகமாக இருந்தால் இரும்பு சத்தின் குறைபாடாக இருக்கும். பெண்களின் பெண்ணுறுப்பு அல்லது பிறப்புறுப்பை பொறுத்தவரையில் அதனை நான்காக வகைப்படுத்தலாம்.

அதன் வகைகளாவது,
1) தாமரை மொட்டுபோல் குவிந்த பெண்ணுறுப்பு
2) வளர்பிறை போல் வட்டமான பிறப்புறுப்பு
3) மடிப்பாகச் சேர்ந்திருக்கும் பிறப்புறுப்பு
4) எருமை நாக்குபோல் தடித்த பிறப்புறுப்பு என்று வகைப்படுத்தலாம்.
அனைத்து பெண்களின் பெண்ணுறுப்பிற்கு அருகே ஆண்குறி போன்று நாடி போல ஒன்று இருக்கும். இந்த நாடியை பெண்கள் சுழற்றினாலோ அல்லது துணையுடன் இணையும் நேரத்தில் தாம்பத்திய விளையாட்டுகளின் போது செய்யும் செயலால் தாம்பத்திய உணர்வானது அதிகமாகும். தாம்பத்தியத்தில் தம்பதிகளின் அனைத்து நிலைகளுக்கான புணர்ச்சி மற்றும் கலவிக்கு இப்பகுதி சரியானது. பெண்களின் பிறப்பிற்கும் - மூளைக்கும் இடையேயான நேரடி தொடர்ப்பு அதிகளவில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே தாம்பத்தியத்தின் போது உச்சகட்டத்தை அடையும் நேரத்திற்கு முன்னதாக மூளையிடம் இருந்து சமிக்கைகள் பெறப்பட்டு, தாம்பத்தியத்தின் போது அதிகளவிலான எதிர்பார்ப்பு மற்றும் ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கிறது.

ஆண்களை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தின் போது ஒரு முறை மட்டுமே உச்சகட்டத்தை அடைய இயலும்.. ஆண்கள் உச்சகட்டத்தை அடைந்ததன் விளைவாக வெளியேறும் விந்தணுக்கள் வெளியேறிய சில மணித்துளிகள் அல்லது இளைப்பாறிய பின்னரே மீண்டும் தாம்பத்தியத்தை முயற்சிக்கலாம். ஆனால் பெண்களுக்கு இது நேர்மறையாக இருக்கும். தொடர்ந்து பல முறை பெண்கள் உச்சத்தை அடையலாம். இந்த உச்சக்கட்டம் தொடர்ந்து அடைவதற்கு பெண்ணுறுப்பின் அமைப்பு மற்றும் பெண்களின் நரம்பு மண்டலத்தின் அமைப்பு முறை மட்டுமே காரணம். பெண்களின் உணர்வை தூண்டும் கிளிட்டோரஸ் பகுதி மிகவும் சிறிய அளவானது என்று நம்மில் பெரும்பாலானோர் எண்ணியிருப்போம். கிளிட்டோரஸ் பகுதியானது மிகவும் பெரியதாகும்.

இது சராசரியாக சுமார் 8000 நரம்புகளின் முடிவாக கிளிட்டோரஸில் இணைகிறது. 18 வகையான வெவ்வேறு நரம்பு மண்டலத்தின் இணைப்பாகும். பெண்களின் பிறப்புறுப்பு என்பது புனிதமான ஒன்றாகும். இதன் மூலமாகவே உலகின் எதிர்கால சந்ததிகள் பிறக்கின்றனர். தமிழ் திரைப்படத்தில் உள்ள பாடலில் "தண்ணீர் கடலில் பிறக்கிறோம்.. தண்ணீர் கரையில் முடிக்கிறோம்" என்று பெண்ணின் பெருமை உணர்த்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமாக பிறப்புறுப்பை பாதுகாப்பது இருபாலருக்கும் பொதுவான ஒன்றாகும்.
இனி பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து காணலாம்:
பெண்களுக்கு பிறப்புறுப்பு சுத்தம் என்பது கட்டாயம் முக்கியமான ஒன்றாகும். பிறப்புறுப்பு சுத்தம் குறித்து தாயாக, சகோதரியாக, தோழியாக உங்களின் நண்பர்களுக்கு, மகள்களுக்கு, தங்கைகளுக்கு சொல்லி கொடுப்பது அவசியம். மேலும், புரிந்து கொள்ள கூடிய வயது அல்லது பக்குவம் உடைய 10 வயது முதல் 12 வயதுடைய சிறுமிகளுக்கு இது குறித்து கூறலாம். பிறப்புறுப்பை எப்படி சுத்தமாக பராமரிப்பது? பிறப்புறுப்பு சுத்தம் என்றால் என்ன? எவ்விதமான பிரச்சனையும் இன்றி உடல்நலத்தை பாதுகாப்பது? பிறப்புறுப்பு சுத்தம் என்பதே உடலின் ஆரோக்கியம் என்பதை வெளிப்படையாக கூறி நலன் மற்றும் பாதகத்தை தெரிவியுங்கள்.

பிறப்புறுப்பு பிரச்சனை வராமல் தடுப்பது :
ஜிம் மற்றும் நீச்சல் போன்ற இடங்களுக்கு சென்ற பின்னர் உள்ளாடையை அவசியம் மாற்ற வேண்டும். இதனை மாறி மாறி அணிந்துகொண்டு இருந்தால் தொற்றுகள் வரும். சத்தான நீர் மூலமாக சோப் போட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்து கொள்ளலாம். எந்த நேரத்திலும் பிறப்புறுப்பை முன்னிருந்து பின்னர் சுத்தம் செய்ய வேண்டும். பின்னிருந்து முன் பகுதி வழியாக சுத்தம் செய்தல் கூடாது. பின்னிருந்து முன்னர் சுத்தம் செய்தால் மலக்கிருமிகள் பிறப்புறுப்புகளை தாக்கும் வாய்ப்புள்ளது. மேலும், பயன்படுத்தப்படும் உள்ளாடையை அதிக கெமிக்கல் கொண்ட சோப் மற்றும் டிடர்ஜண்ட் பயன்படுத்தி துவைப்பதை தவிர்க்கவும். இவ்வாறான அதிக கெமிக்கல் கொண்ட சோப் மூலமாக எரிச்சல் மற்றும் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

உள்தொடை பகுதிக்கு நாற்காலியில் படுத்துக்கொண்டு கால்களை சுவற்றில் மடக்கி வைத்து நிமிர்த்த வேண்டும். இவ்வாறாக செய்வதால் தொடைகளின் இடுக்கு பகுதியில் அதிகளவு சதைகள் இருக்காது. இதனால் அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படாது. மேலும், நேராக உட்காரும் பழக்கத்தை வைத்துக்கொள்வது நல்லது. நேராக அமருவதால் உடலின் இரத்த ஓட்டம் சீராகும். பிறப்புறுப்பிற்கும் - அடிஇடுப்பு பகுதிக்கும் இரத்த ஓட்டமானது சீராக செல்லும். மாதவிடாய் காலங்களில் 3 மணிநேரம் முதல் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டாம்பான்களின் மாற்றம் அவசியம். பிறப்புறுப்பு பகுதிகளில் இருக்கும் முடிகளை அவ்வப்போது ட்ரிம் செய்து கொள்ளுதல் நல்லது. மேலும்., முடியை நீக்குவதற்கு க்ரீம் போன்றவற்றை பயன்படுத்துவது கெமிக்கல் பாதிப்பிற்கு பிறப்புறுப்பு உள்ளாக நேரிடும்.

பிறப்புறுப்பு சுத்தம் :
பிறப்புறுப்பில் வாசனை மிகுந்த சோப், பாடிவாஷ், ஜெல் மற்றும் ஆண்டி செப்டிக் போன்றவற்றை உபயோகம் செய்தலை தவிர்ப்பது நல்லது. மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் பி.எச் அளவை மாற்றி பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், மாதவிடாய் நேரத்தில் 2 முதல் 3 முறை பிறப்புறுப்பை சுத்தம் செய்து கொள்ளுதல் நல்லது. மேலும், மலவாய் பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சாதாரண நீர் அல்லது உடலுக்கு உபயோகம் செய்யும் சோப் போன்றவை போதுமான ஒன்றாகும். இதனை வைத்தே பிறப்புறுப்பு பகுதியினை சுத்தம் செய்து கொள்ளலாம். பிரத்தேயேகமாக சுத்தம் செய்தல் போன்றவவை தேவையற்றது. இயற்கையான முறையிலேயே பிறப்புறுப்பை சுத்தம் செய்து கொள்ளலாம்.

பிறப்புறுப்பை பாதுகாக்கும் உடை :
இறுக்கமான மற்றும் உடல்களை இறுக்கி பிடிக்கும் ஆடைகள் உடலை மட்டுமல்லாது, இவ்வாறான உடையை அணிந்தால் பிறப்புறுப்பு பகுதி எளிதில் சூடாக்கும். இதனால் நோய்த்தொற்றுகள் அதிகளவில் ஏற்படும். பருத்தியினால் ஆன உள்ளாடைகளை அணிவது உடலுக்கு நல்லது. பாலிஸ்டர் என்று அழைக்கப்படும் உள்ளாடையை தவிர்ப்பது சாலச்சிறந்தது. வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை இருக்கும் பட்சத்தில், நாளொன்றுக்கு கட்டாயம் இரண்டு முறை உள்ளாடையை மாற்ற வேண்டும். இரவு நேரங்களில் உறங்கும் போது உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Types of Vagina and Problems and Solution of Vaginal Issue Such as Itching and Bad Smell