உதடு கருக்காமல் இருக்க, நாள்பட்ட கருமை நீங்க, நிறம் மாற.... நான் சொல்ற இந்த டிப்ஸ் follow பண்ணுங்க...
To prevent dark lips change color your lips and get rid of chronic dark spot Follow these tips
கருக்காமல் இருக்க:
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீமை கை, கால்களுக்கும் பூசிக் கொள்ள வேண்டும்.
உதடு கருமை நீங்க:
சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச்சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

உதட்டிற்கு மேல் உள்ள கருமை நீங்க:
ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இப்படிதினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும்.இதற்கு கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா-கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இவை பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்து, வெள்ளையாவதற்கு உதவும்.
வெண்மையாக மாற:
பாதி எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சாறு மற்றும் நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து பயன்படுத்தினால், வெயிலில் சருமத்தின் நிறம் கருப்பாவதற்கு தீர்வு கிடைக்கும்.
கருமை நீங்க:
ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் 1 கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.அதன் பின் வறட்சியைத் தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
English Summary
To prevent dark lips change color your lips and get rid of chronic dark spot Follow these tips