வயிற்று பிரச்சனையை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய எளிமையான உணவு..! - Seithipunal
Seithipunal


சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் உணவை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். இப்போது ருசியான கம்பு ரவை வெண்பொங்கலை எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கம்பு ரவை - 2 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை :

கம்பு ரவை வெண்பொங்கல் செய்வதற்கு முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு, வாசனை வரும் வரை வறுத்து வைத்துக்கொள்ளவும். 

பின்பு இஞ்சி, பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் கம்பு ரவை மற்றும் வறுத்து வைத்துள்ள பாசிப்பருப்பைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழைய வேகவைக்கவும். 

பின்னர் ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், அதில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, வேகவைத்துள்ள பொங்கலில் சேர்த்துக் கிளறினால் ருசியான கம்பு ரவை வெண்பொங்கல் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rava pongal preparation in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->