காடை ரோஸ்ட் கிரிஸ்பியா... காரமா... டேஸ்டா...! - Seithipunal
Seithipunal


காடை ரோஸ்ட் 
தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
காடை  - 5 
பெரிய வெங்காயம்  - ஒன்று 
பச்சை மிளகாய் -  4 
இஞ்சி பூண்டு விழுது  - இரண்டு டீஸ்பூன் 
கரம் மசாலாப்பொடி  - ஒரு டேபிள் ஸ்பூன் 
சீரகப்பொடி  - ஒரு டீஸ்பூன் 
மிளகுப்பொடி -  ஒரு டீஸ்பூன் 
மஞ்சள் பொடி  - அரை டீஸ்பூன் 
மிளகாய்பொடி ஒரு டேபிள் ஸ்பூன் 
வினிகர் 2 டேபி - ள் ஸ்பூன் 
உப்பு  - தேவைக்கேற்ப 
எண்ணெய் -  தேவைக்கேற்ப 


செய்முறை :
 காடையை சுத்தம் செய்து துண்டுகளாக போட்டுக் கொள்ளவும் பின்பு அனைத்து மசாலா பொருட்கள் மற்றும் வினிகர், உப்பு ஆகிய பொருட்களை போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஊற விடவும்.பின்பு வெங்காயத்தை நீளவாகில் அரியவும், பச்சை மிளகாயையும் நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தையும், மிளகாயையும் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.பிறகு அதே வாணலியில் பிரட்டி வைத்துள்ள காடையை போட்டு கிளறவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.

தண்ணீர் வற்றி வரும் தருவாயில் வறுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை அதன் மேல் தூவவும்.காடையையும் மசாலாவும் சிவந்த நிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
சுவையான காடை ரோஸ்ட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Quail Roast


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->