பெண்களின் மாதவிடாய் இறுதி காலம்...!!  - Seithipunal
Seithipunal


பெண்களின் வாழ்க்கையில் முக்கியமானது பருவமடைதல் என்னும் மாதவிடாய் சுழற்சி துவங்கும் காலமும் - நிறைவு பெரும் காலமும் தான். இந்த விஷயத்தை பொறுத்த வரையில் பெண்கள் அதிகளவில் கவலை கொள்வது வழக்கம். பெண்கள் தங்களின் மாதவிடாய் இறுதியை அடைவதை தொடர்ந்து 12 மாதவிடாய் ஏற்படாமல் இருக்கும் பட்சத்திலேயே மாதவிலக்கை உணர்ந்து கொள்ளலாம். பெண்களின் உடலில் இருக்கும் ஈஸ்டிரோஜன்., புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களின் சுரப்பானது குறைவதால் மாதவிடாய் நிற்கிறது. இதனுடன் பெண்களின் இனப்பெருக்கமும் நிறைவு கட்டத்தை எட்டுகிறது. இந்த மாதவிலக்கானது பெண்களுக்கு 45 வயது முதல் 52 வயதுக்குள் ஏற்படலாம்.  

periods, girls periods, Menopause, Menopause pain,

பெண்களின் கருமுட்டைகள் தாம்பத்திய கூடுதலின் மூலமாக கருவுற வைத்து., கருவுறாத பட்சத்தில் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்களின் வயது அதிகரிக்கும் சமயத்தில் கருமுட்டைகள் எண்ணிக்கை குறைகிறது. மாதவிடாயை எட்டப்போகும் தருணத்தில் கருமுட்டையானது உற்பத்தி செய்யப்படுவதில்லை. பெண்களின் பருவமடையும் காலம் உடலின் வளர்ச்சியால் இயற்கையாக நடைபெறுவதை போல., மாதவிலக்கும் உடலின் முதிர்ச்சியால் இயற்கையாக தனது பணியை நிறைவு செய்கிறது.  மாதவிடாய் துவங்குவதற்கு முன்னரும் - நிறைவடைதலுக்கு முன்னரும் பின்னரும் பெண்களின் உடலளவில் மாற்றமானது ஏற்படும். 

enjoy with couple, affair, illegal affair, enjoy with partner

இந்த மாற்றங்கள் உடலளவிலும் - மனதளவிலும் ஏற்பட்டு., அந்தந்த சமூக மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு மாறுபாடு அடைகிறது. பெண்களின் உணவு பழக்கவழக்கங்கள்., துணையுடன் கூடிய பாலியல் நடத்தைகள் மற்றும் மரபியல் போன்ற காரணங்களால் மாற்றமடைகிறது. இதுமட்டுமல்லாது பிற காரணத்தாலும் மாற்றங்கள் உடளவில் ஏற்படலாம். பொதுவாக இன்றுள்ள காலத்தில் ஏற்படும் புதிய சூழல்., அதிகளவிலான கவலை., மன அழுத்தம் போன்ற காரணத்தால் கருமுட்டை வெளியேறாமல் மாதவிடாய் ஏற்படாமல் கூட இருக்கலாம். இதனை தவிர்த்து நாள்பட்ட நோய்கள்., இரத்த சோகை., ஊட்டச்சத்து குறைபாடு., உடற்பருமன்., நரம்பு தளர்ச்சி மற்றும் பிற காரணத்தால் மாதவிடாய் ஏற்படாமல் இருக்கலாம். இது போன்ற பிரச்சனை மாதவிலக்காக ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். 

நமது நாட்டில் உள்ள சூழ்நிலையை பொறுத்த வரையில் பெண்களுக்கு கால்கள் முதல் தலை வரை வெப்பம் பரவும் சூழலும்., காதுகளின் வழியே வெப்பம் பரவும் சூழலும் ஏற்படும். இதனை சில பெண்கள் உயர்ந்தும் இருப்பார்கள். பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவு என்று பார்த்தால் எலும்புகளின் தேய்மானம்., எலும்புகளின் முறியும் நிலை., தீடீரென சுரக்கும் வியர்வை., திடீர் படபடப்பு., மன அழுத்தம்., மன அமைதியின்மை., தூக்கமின்மை., பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி., சிறுநீரை அடக்க முடியாத நிலை., தோளில் மாற்றம்., நீட்சித்தன்மை குறைபாடு மற்றும் இதய கோளாறுகள் உள்ளது. 

girl, birth part, birth part itching, period itching,

பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியின் காரணமாக தாம்பத்திய நேரத்தில் வலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு ஹார்மோன்கள் சிகிச்சை மற்றும் எண்ணெய் பசை தன்மையுள்ள பாதுகாப்பான க்ரீம்கள் உபயோகம் செய்து சிறிதளவு சிரமத்தை குறைத்தல் போன்றவை செய்யலாம். பெண்களின் மாதவிலக்கு சமயத்தில் உடல் ஓய்வு மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஊட்டச்சத்துக்களை பொறுத்தளவில் உளுந்தங்களியை சாப்பிடலாம். இதுமட்டுமல்லாது பருவமடைந்த நாட்களில் இருந்து தியானம் மற்றும் யோகா செய்வது ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருப்பை கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதன் மூலமாக மாதவிலக்கு சமயத்தில் அதிகளவு இரத்தப்போக்கை சரிசெய்ய இயலும். 

Tamil online news Today News in Tamil

mother milk, breast milk, cute baby drinking mother milk,

பெண்கள் தங்களின் குழந்தைக்கு கட்டாயம் ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். பெண்களின் பிறப்புறுப்பு செயல் திறனை பாதுகாக்க சலபாசனம்., தனுராசனம் மற்றும் புஜங்காசனம் செய்து வர வேண்டும். இந்த மூன்று ஆசனமும் கருப்பையை திறம்பட செயல்பட உதவுகிறது. இதனுடன் சேர்த்து கட்டாயம் வாழ்வியல் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்தல்., சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடுதல்., சுறுசுறுப்பாக செயல்படுதல்., நல்ல உறக்கம்., நிம்மதி மற்றும் இரசாயன அல்லது பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளை தவிர்த்தல் உடலுக்கு நல்லது. 

enjoy with couple, affair, illegal affair, couple enjoy,

மாதவிலகிற்கான காலம் வந்ததும் துணையுடன் தாம்பத்திய கூடலுக்கு / நெருங்குதலுக்கு உடல் ஒத்துழைக்காது மற்றும் தாம்பத்திய உணர்வுகள் குறைந்துவிடும் என்பது சரியான கூற்றல்ல. பெண்களை பொறுத்த வரையில் மாதவிடாய்க்கு முந்தையை நாட்கள் மற்றும் மாதவிலக்கு பெரும் நாட்களில் அறியாத பருவத்திலும் தாம்பத்திய எண்ணம் அல்லது ஒரு வினோதமான உணர்வு இருக்கும். இதன் காரணமாக துணையுடன் தாம்பத்தியம் இனி முடியாது என்று என்ன வேண்டாம். பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் மாதவிடாய் இறுதி நேரத்தில் சுரப்பதில்லை என்பதால் தாம்பத்தியத்தில் வலியை அதிகளவு உணர்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

periods or Menopause end of woman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal