ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு இந்த பச்சை பட்டாணி பருப்பு வடை செஞ்சு கொடுங்க... விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைங்க...!
Make this green pea dal vada for evening snacks the kids will love it
பட்டாணி பருப்பு வடை
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பட்டாணி பருப்பு - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 25
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு,ஊறிய பின் 1 கைப்பிடி பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, மீதியுள்ள பருப்பில் உப்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து, வடைக்கு அரைப்பது போல் கரகரப்பாக அரைக்கவும்.
அதன் பின்பு,வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, அரைத்த மாவுடன், எடுத்து வைத்த பருப்பையும் சேர்க்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் மாவை வடைகளாக தட்டி, பொரித்து எடுக்கவும்.
English Summary
Make this green pea dal vada for evening snacks the kids will love it