கிட்ஸ் favourite! ஈசி சிக்கன் ரோல்... செய்யலாமா?
Kids favorite Easy chicken roll can you make it
ஈஸி சிக்கன் ரோல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
சிக்கன் (எலும்பு இல்லாதது) - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி சட்னி - கால் கப்
மைதா மாவு - 150 கிராம்

செய்முறை :
முதலில்,சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக எலும்பு இல்லாதவாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு,மைதா மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்தியாக தேய்த்து சுட்டு வைத்துக் கொள்ளவும்.சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்திருக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை எடுத்து போட்டு வதக்கவும்.சிக்கனுடன் சீரகத் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், சாட் மசாலா ஆகிய எல்லாவற்றையும் போட்டு பிரட்டி விட்டு நன்கு வேக விடவும்.
சிக்கன் நன்கு வெந்ததும் அதன் மேல் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி வைக்கவும்.அதன் பிறகு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேல் கொத்தமல்லி சட்னியை தடவி விடவும்.அதில் வதக்கி வைத்திருக்கும் சிக்கனை வைத்து சப்பாத்தியை அப்படியே ரோலாக சுருட்டவும்.அவ்வளவுதான் சுவையான சிக்கன் ரோல் ரெடி ....
English Summary
Kids favorite Easy chicken roll can you make it