என்னிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்: எதிர்கட்சிகளை சாடிய ஜே.பி. நட்டா! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சி எப்படி பணியாற்ற வேண்டும் என என்னிடம் கற்று கொள்ளுங்கள் என நான் கூற முடியும். ஏனெனில், அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க போகிறீர்கள் என ஜே.பி. நட்டா கூறினார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது . இந்த கூட்டத்தொடர் தொடங்கிய, முதல் நாளிலிருந்து ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது.அப்போது இது குறித்து  பிரதமர் மோடியும்  விளக்கம் அளித்து பேசினார். இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருவதால் அவை நடவடிக்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும் நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த அவை தலைவரான ஜே.பி. நட்டா இடையே இன்று கடுமையான விவாதம் ஏற்பட்டது.

அவையில் கார்கே பேசும்போது, உறுப்பினர்கள் தங்களுடைய போராட்டத்திற்கான ஜனநாயக உரிமையை உண்டு ,அப்போது , சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் அவையின் மைய பகுதிக்கு வருவது என்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றும்  வந்தனர். இன்றும் வந்துள்ளனர்.

இந்தளவுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் கீழிறங்கி விட்டனவா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஜே.பி. நட்டா, நான் பேசி கொண்டிருக்கும்போது, சிலர் எனதருகே வந்து கோஷம் எழுப்புவது என்பதும் ஜனநாயகம் அல்ல. அவை சீராக நடப்பதற்கான வழி இதுவல்ல.அவை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல என நீங்களே தெளிவுப்படுத்தி விட்டீர்கள். 


 எதிர்க்கட்சி எப்படி பணியாற்ற வேண்டும் என என்னிடம் கற்று கொள்ளுங்கள் என நான் கூற முடியும். ஏனெனில், அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்க போகிறீர்கள் என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Learn a lesson from me J P Nadda criticized the opposition parties


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->