ஆமா சதி இருக்கு... திருமாவளவனுக்கு பாதுகாப்பை அதிகாரிங்க.. கமலஹாசன் கோரிக்கை!
VCK thirumavalavan Kamal Hassan
சென்னை உயர்நீதிமன்றம் அருகே கடந்த மாதம் 7ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் முன் சென்ற இரு சக்கர வாகனத்துடன் மோதியதாக கூறி, இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற வழக்கறிஞர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தில், வி.சி.க.வினர் அந்த வழக்கறிஞரை தாக்கியதாக தகவல் வெளியாகி, சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இதற்கு விளக்கம் அளித்த திருமாவளவன், “எனது கார் இரு சக்கர வாகனத்தை மோதி இல்லை. பிரச்சனை ஏற்படுத்தியது அந்த தம்பிதான்” என தெரிவித்தார். மேலும், தனது காரை வழிமறித்தது ‘தற்செயலானது அல்ல; திட்டமிட்ட சதி’ என சந்தேகம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இயக்குநர் பா.ரஞ்சித், திருமாவளவனுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், மக்கள் நீதி மையம் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஹாசன், திருமாவளவனின் சந்தேகம் நியாயமானது என்றும், பா.ரஞ்சித்தின் அக்கறை உண்மையானது என்றும் கூறி, “தம்பி திருமாவளவன் சென்ற கார் வழிமறிக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறை விசாரணையை வேகப்படுத்த வேண்டும். மேலும், அவரது பாதுகாப்பை அதிகரிக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
English Summary
VCK thirumavalavan Kamal Hassan