பிகார்: தேர்தல் ஆணையத்தால் இறந்ததாக நீக்கப்பட்ட மூவர் உயிரோடு வந்து மனு கொடுத்த அவலம்!
Bihar Election 2025 Electoral commission
நவம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த மாதமே தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை வேகமாக முடித்தது.
அந்த பணியின் போது, 3.66 லட்சம் பேரின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள், போலி வாக்காளர்கள் மற்றும் குடியேறியவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகள் இதை பாஜகவின் வாக்கு திருட்டு சதியாக குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், பீகாரின் தோரையா தொகுதியின் பட்சர் கிராமத்தில் வாழும் ஐந்து பேர் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார் தாஸ் மற்றும் விஷ்னவார் பிரசாத் தாங்கள் உயிருடன் இருந்தபோதும், வாக்காளர் பட்டியலில் “இறந்தவர்கள்” எனக் குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தொகுதி மேம்பாட்டு அதிகாரி அரவிந்த் குமாரிடம் புகார் அளித்து, “ஐயா, நாங்கள் உயிருடன் இருக்கிறோம்” எனக் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து பதிலளித்த அரவிந்த் குமார், “பிழை சரி செய்யப்படும்; எந்த தகுதியான வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது” என உறுதியளித்தார்.
இதற்கு முன்பும் சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்தில் 15 பேரின் பெயர்கள், “உயிரிழந்தவர்கள்” என குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்டிருந்தது. மேலும், 2018ல் உயிரிழந்த சோனியா சரண் மற்றும் அவரின் மகன் மணித் மணி ஆகியோரின் பெயர்கள் 2025 வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
English Summary
Bihar Election 2025 Electoral commission