திரு.துவாரகா பிரசாத் மிஸ்ரா அவர்கள் பிறந்ததினம்!.
Mr Dhuvaraka Prasad Mishra was born today
விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான திரு.துவாரகா பிரசாத் மிஸ்ரா அவர்கள் பிறந்ததினம்!.
விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான துவாரகா பிரசாத் மிஸ்ரா அவர்கள 1901ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் பண்டரி கிராமத்தில் பிறந்தார்.
அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது, நேரு குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 1920-ல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். தொடர்ந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
'ஸ்ரீ சாரதா’ மாத இதழ், ‘தைனிக் லோகமத்’ நாளிதழ், ‘சாரதி’ நாளிதழ் மற்றும் வார இதழ்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
சிறையில் இருந்தபோது ‘மானஸ் கா ராம் அவுர் சீதா’ என்ற நூலை எழுதினார். இதில் துளசி ராமாயணத்தை பகுப்பாய்வு செய்துள்ளார். 1937-ல் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றார்.
அரசியல் குறித்து இவர் எழுதிய ‘மேரே ஜியா ஹுவா யுக்’ போன்ற புத்தகங்கள் பிரபலமானவை. லாலா லஜ்பத்ராய் கொலை குறித்து ‘லோகமத்’ பத்திரிகையில் இவரது கட்டுரையைப் படித்த மோதிலால் நேரு, ‘தலைசிறந்த குற்றவியல் வழக்கறிஞரின் நேர்த்தியான குற்றப் பத்திரிகையைவிட சிறப்பாக இருக்கிறது’ என்று பாராட்டினார்.
மத்தியப் பிரதேச முதல்வராக 2 முறை பணியாற்றினார். சிறந்த நிர்வாகி. முடிவெடுப்பதில் வல்லவர். அனைவரும், குறிப்பாக கிராம மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.
இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மேதை. சமஸ்கிருதம், உருது கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்தவர். இலக்கியவாதி, வரலாற்று அறிஞர், கல்வியாளராக புகழ்பெற்ற துவாரகா பிரசாத் மிஸ்ரா 87 வயதில் 1988 மே 31 ஆம் தேதி அன்று மறைந்தார்.

பழம்பெரும் பன்முகம் கொண்ட நடிகர் "தென்னகத்து சார்லி சாப்ளின்" திரு.சந்திரபாபு அவர்கள் பிறந்ததினம்!.
நடிகர் சந்திரபாபு (J.P.Chandrababu ஆகஸ்ட் 5, 1927 – மார்ச் 8, 1974) தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அவரது சாப்லினெஸ்க் பாணி திரை அசைவுகள் மற்றும் பாடும் பாணி 1940களின் பிற்பகுதியிலிருந்து 1970களின் முற்பகுதி வரை அவரை பிரபலமாக்கியது.
மெட்ராஸ் பிராந்தியத்திற்கு தனித்துவமான ஒரு பேச்சுவழக்கான மெட்ராஸ் பாஷையில் அவருக்கு தேர்ச்சி இருந்தது. அவரது நகைச்சுவை பாணி அடுத்தடுத்த நடிகர்களால் பின்பற்றப்பட்டது. அவரது பல பாடல்கள் பிரபலமாக உள்ளன. தென்னிந்திய சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு ரூ. 1,00,000 சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் ஜே.பி. சந்திரபாபு என்று கூறப்படுகிறது,
English Summary
Mr Dhuvaraka Prasad Mishra was born today