கலைஞர் பல்கலைக்கழக மசோதா... ஆளுநர் ஆர்என் ரவி எடுத்த நடவடிக்கையால் அதிர்ச்சியில் காங்கிரஸ்!  - Seithipunal
Seithipunal


கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அரசு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், மசோதாவை நேரடியாக ஒப்புதல் வழங்காமல், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அதை அனுப்பியுள்ளார்.

துணைவேந்தர் நியமன நடைமுறை மற்றும் யுஜிசி விதிமுறைகள் குறித்து சில விளக்கங்களும் சட்டசிக்கல்களும் உள்ளதாகக் கூறி, இதை அரசு தகுந்தவாறு பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்ற காரணங்களை முன்வைத்து மசோதா குடியரசுத் தலைவரிடம் அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காங்கிரசின் செல்வபெருந்தகை விடுத்துள்ள கண்டன செய்தியில், "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் 28, 2025 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

டெல்டா மாவட்ட இளைஞர்களின் உயர்கல்வித் தேவையைப் பூர்த்தி செய்யவும், பின்தங்கிய பகுதி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்கவும், இந்த பகுதி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும், கலைஞர் பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. 

ஆனால், ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், வேண்டுமென்றே காலம்தாழ்த்தி இன்று (05.08.2025) மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வியில் அரசியல் செய்யும் ஆளுநரின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kalaingar University kumbakonam bill Govr RN Ravi DMK Congress


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->