இந்தியாவுக்கு அந்த உரிமை உள்ளது: அமெரிக்காவின் பேச்சுக்கு ரஷ்யா கருத்து!
India has that right Russia responds to Americas speech
தனது வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. நாங்கள் பல அறிக்கைகளை சொல்லப்போனால் அச்சுறுத்தல்களை பார்த்து வருகிறோம் என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு பொருட்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு " உக்ரைன் மோதல் தொடங்கிய பின், உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்நேரத்தில் அமெரிக்கா இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை தீவிரமாக ஊக்குவித்தது.உண்மையில், மோதல் வெடித்த பிறகு வழக்கமான விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால் இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது.
இந்தியாவின் இறக்குமதிகள் இந்திய நுகர்வோருக்கு கணிக்கக்கூடிய மற்றும் மலிவு விலையில் எரிசக்தி செலவுகளை உறுதி செய்வதற்காகவே உள்ளன என கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் கருத்துக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், தனது வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. நாங்கள் பல அறிக்கைகளை சொல்லப்போனால் அச்சுறுத்தல்களை பார்த்து வருகிறோம். ரஷ்யாவுடன் உறவை துண்டித்துக்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. இவற்றை சட்டப்பூர்வமானதாக நாங்கள் கருதவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
India has that right Russia responds to Americas speech