ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய, வாழைக்காய் புட்டு..! - Seithipunal
Seithipunal


காலையில் நல்ல ஆரோக்கியமான, அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய கேரளா உணவான வாழைக்காய் புட்டு செய்யலாம். மேலும் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். 

பலன்கள்: இந்த உணவில் கல்லீரல் பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய தன்மையும், ஆண்களுக்கு சிறுநீரக கல் ஏற்படும் பிரச்சனையும் தவிர்க்கும். 

இப்போது இந்த கேரளா உணவான வாழைக்காய் புட்டு எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

வாழைக்காய் - 3 
தேங்காய் - 2 கப் (துருவியது) 
கைக்குத்தல் அரிசி மாவு - 2 கப் 
சர்க்கரை - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் வாழைக்காயை போட்டு, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். 

பின் கைக்குத்தல் அரிசி மாவில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் வேக வைத்த வாழைக்காயை சேர்த்து, புட்டு மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புட்டு வேக வைக்கும் குடுவைப் போன்று உள்ள பாத்திரத்தில், பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் உள்ள பகுதியில், நான்கில் ஒரு பங்கு மாவைப் போட்டு, அதன் மேல் 3 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை போட்டு, தேவையான அளவு சர்க்கரையை தூவி விட வேண்டும்.

பின்னர் மீண்டும் மாவைப் போட்டு, தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான வாழைக்காய் புட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare vazhaikkai puttu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->