புதிய சுவையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட்.!!  - Seithipunal
Seithipunal


நாம் இதுவரைக்கும் உருளைக்கிழங்கில் வறுவல், குழம்பு இப்படிதான் செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது முதன் முறையாக உருளைக்கிழங்கில் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

நல்லெண்ணை
கடுகு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயப்பொடி
கறிவேப்பிலை
உருளை கிழங்கு
ரோஸ்மேரி
வெங்காயம்
இஞ்சி
பூண்டு
மஞ்சள் பொடி
பச்சை மிளகாய்
காஷ்மீரி சில்லி பொடி
கறிவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு

செய்முறை:-

முதலில் உருளைகிழங்கு மற்றும் ரோஸ்மேரியை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உருளையை வெளியே எடுத்து ஆறின பின் தோலுரித்து சின்ன துண்டுகளாக நறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு வானலை வைத்து சூடானதும் எண்ணை விட்டு கடுகு, வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி பொடி, உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளற வேண்டும். இவை நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make urulai kizhangu rost


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->