உடலுக்கு நன்மை தரும் பயத்தங்கஞ்சி - இப்படி ஒருமுறை செய்து பாருங்க.!!
how to make payaru kanchi
பயத்தங்கஞ்சி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்;-
பாசிப்பருப்பு, வெல்லம், பால், ஏலக்காய் தூள், நெய்.
செய்முறை:-
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு குக்கரில் ஒரு பங்கு பருப்புக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் வெள்ளத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதனை வெந்த பாசிப்பருப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து வரும்போது பாலை சேர்த்து ஒரு முறை கொதித்ததும் இறக்கவும். அதில் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறினால் சுவையான பயத்தங்கஞ்சி தயார்.
English Summary
how to make payaru kanchi