கத்தரிக்காய் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


கத்தரிக்காய் இருக்கா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க.!

காய்கறி வகைகளில் ஒன்று கத்தரிக்காய். இந்தக் காயை வைத்து எண்ணெய் கத்தரிக்காய், கார குழம்பு, சாம்பார், கத்தரிக்காய் பொரியல் உள்ளிட்டவை செய்யலாம். அனால், முதல் முறையாக கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு செய்வது எப்படியென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

கத்தரிக்காய், துவரம் பருப்பு, காராமணி, உப்பு, மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் பொடி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, எண்ணெய், துருவிய தேங்காய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் 

செய்முறை :-

ஒரு பாத்திரத்தில் கத்தரிக்காய், காய்ந்த மாங்காய் பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்து எடுத்து வைக்க வேண்டும். பின்னர் கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்த்து, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு மற்றும் பெருங்காயம் சேரத்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்க வேண்டும்.

இதனுடன் தேங்காயை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வெந்துகொண்டிருக்கும் கத்தரிக்காயுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இதையடுத்து, வேக வைத்த பருப்பு மற்றும் காராமணி சேர்த்து கிரேவியாக வரும் வரை கொதிக்க விடவேண்டும்.

மேலும், ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கிரேவியில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make brinjal poricha kuzhambu


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->