அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு 'கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக்' இப்படி செய்து குடிங்க.!
Guava Rose Milk Shake recipe tamil
சுவையான கொய்யாப்பழ ரோஸ் மில்க் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கொய்யா பழம்
ரோஜா இதழ்கள்
சர்க்கரை
பால்
ஏலக்காய் தூள்
முந்திரி, பாதாம்
வெண்ணிலா எசன்ஸ்
செய்முறை:
முதலில் கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி தோல் மற்றும் விதைகளை நீக்கி நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி காய்ந்த பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள கொய்யாப்பழம், ரோஜா இதழ்கள், தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு காய்ச்சி ஆற வைத்துள்ள பால், இரண்டு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து பின்னர் முந்திரி, பாதாம் சேர்த்து பரிமாறினால் அவ்வளவுதான் சுவையான கொய்யாப்பழ ரோஸ்மில்க் தயார்.
English Summary
Guava Rose Milk Shake recipe tamil