மகளிர் பக்கம் : உள்ளாடையும் பெண்களின் ஆரோக்கியமும்...!! 
                                    
                                    
                                   girl inner wear cloth represent her health 
 
                                 
                               
                                
                                      
                                            பெண்கள் அணியும் உள்ளாடைக்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் அதிகளவு தொடர்பு உள்ளது. பெரும்பாலான பெண்கள் உள்ளாடை விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். ஈரமான உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவது உடலுக்கு மிகவும் ஆபத்தானதாகும். 
இதனால் சருமத்தில் எரிச்சல் மற்றும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. துணிகளை பொதுவாக துவைத்த பின்னர், நறுமணத்திற்க்காக டிடர்ஜன்டுகளை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். 
பெரும்பாலான பெண்கள் இடுப்பில் உள்ள தசையினை குறைக்கும் நோக்கத்தோடும், கட்டுடல் அழகை அதிகரிக்கவேண்டும் என்று கூறி "ஷேப் வியர்" என்ற உள்ளாடைகளை அணிந்து வருகின்றனர். இதனை நீண்ட நேரம் அணியும் பட்சத்தில் இரத்த ஓட்டமானது தடைபடும். 

இதுமட்டுமல்லாது உடலில் வாயு, உடலின் வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு உடலில் தேவையில்லாது முடி வளரும். முடிகளை சூழ்ந்துகொண்டு வீக்கமும், தடிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படும். 
இந்த வகையான பிரச்சனைகள் இறுக்கமான உள்ளடைகளை அணியும் நபர்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. இதனைப்போல ஈஸ்ட் தொற்று பிரச்சனையும் அதிகளவு இருக்கும். மேலும், நாம் அணியும் உள்ளாடைகள் வழியாக சருமத்திற்கு தேவையான காற்று சென்று வர வேண்டும். 
பெரும்பாலான பெண்கள் இன்றளவில் நைலான், பாலிஸ்டர் மற்றும் லைக்காரா போன்ற காற்று உள்ளே நுழைய இயலாத ஆடைகளை அணிந்து, காற்று உள்ளே புகுவதற்கு பெரும் தடுப்பு செய்கின்றனர். இது ஆரோக்கியத்திற்கும் சுகாதாரத்திற்கும் மிகப்பெரிய எதிரி ஆகும். பருத்தியினால் ஆன உள்ளாடைகள் உடலுக்கு நல்லது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       girl inner wear cloth represent her health