U/A தணிக்கை சான்றிதழ் பெற்ற 'பராசக்தி'..! ஜன நாயகனுக்கு..?
The film Parasakthi received a censor certificate
சிவகார்த்திகேயனின் 25-வது படமான பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாகவும், ரவி மோகன், அதர்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
இந்த பராசக்தி படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று நேற்று படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராசக்தி வரும் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதேநேரத்தில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் 09 ஆம் தேதி வெளியவுள்ளது. ஆனாலும், அப்படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The film Parasakthi received a censor certificate